திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்.
திரைப்பட நடிகராகவும் முரசொலியின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். இதனை தமிழகம் முழுவதும் தற்போது திமுக தொண்டர்கள் உதயநிதி ரசிகர்கள் உள்ளிட்டோர் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.