Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடுகளை மேய்க்க சென்ற வழியில்…. வேட்டையாடிய 3 பேர்…. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

உடும்பு வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மஞ்சுவிளை காமராஜ் நகர் பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாசிங் என்ற மகன் உள்ளார். இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் களக்காடு வனத்துறையினருக்கு ராஜாசிங் வீட்டில் உடம்பு கறி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் படி வனத்துறையினர் ராஜாசிங் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜாசிங் வீட்டில் உடும்பு கறிகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து வனத்துறையினர் ராஜாசிங்கை கைது செய்ததோடு அவர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உடும்பு கறியையும் பறிமுதல் செய்தனர். அதன்பின் வனத்துறையினர் ராஜசிங்கிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வடக்கு பச்சையாறு அணை பகுதியில் ஆடுகளை மேய்க்க சென்றபோது ராஜாசிங் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ரவி, ஊய்காட்டான் ஆகிய 3 பேரும் சேர்ந்து உடும்பை வேட்டையாடி அதனை வெட்டி துண்டுகளாக்கி பங்குபோட்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் ராஜாசிங்கை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவி மற்றும் ஊய்காட்டான் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |