கோண்டாவில், ராணுவத்தளபதி Katumba Wamala, சென்ற வாகனத்தில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவரின் மகள் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் ராணுவ தளபதி மற்றும் நாட்டின் பணிகள், போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும், Katumba Wamala என்பவர் Kisaas-ல் இருக்கும் Kisota என்ற சாலையில், வாகனத்தில் தன் மகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், அவரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
https://twitter.com/DouglasLwangaUg/status/1399615865470033921
அதன் பின்பு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் Katumba Wamalaவின் மகளும், வாகன ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த காயங்களுடன் Katumba Wamala, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.