தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு டிசம்பர் 2021 ஜூன் 2022 நடத்தப்பட்ட நிலையில் அந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எனவே தேவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , [email protected] என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.