செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், AIADMKவில் யாராக இருந்தாலும் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்றும் பேசுவது இல்லை. அதேபோல ரெட்டை வேடம் போடுகின்ற சந்தர்ப்பவாதிகளாகவோ அல்லது நேரத்துக்கு நேரம் கலர் மாத்திக் கொள்கின்ற பச்சோந்திகளாகவோ நாங்க என்னைக்கு இருந்தது கிடையாது. இதற்கெல்லாம் சொந்தக்காரர் திமுக தான். அதனால எங்களை பொறுத்தவரை பேச்சில மாறுதல் கிடையாது.
திமுக அப்படி இல்லை மாறி மாறி பேசும். தமிழக உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறுல, காவேரி நீர்ல, இலங்கை தமிழர் விஷயங்கள்ல இது மாதிரி நிறைய சூழலில் திமுக ரெட்டை வேடம் போட்டுக் கொண்டு சந்தர்ப்பவாத அரசியல் செய்வதெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரியும். சசிகலாவை ஆதரித்தது, டிடிவி தினகரனை ஆதரித்தது இது எல்லாமே இரட்டை வேடம் அல்ல.
அம்மா அம்மா மறைவுக்குப் பிறகு ஒரு தற்காலிக ஏற்பாடு. தொண்டர்களுடைய முடிவு. தொண்டர்களின் முடிவை ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டோம். தனிப்பட்ட முடிவு யாரும் எடுக்க முடியாது. ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்றால் ? யார் எடுத்த முடிவு ? தனிப்பட்ட நாங்களா எடுத்தோம். இபிஎஸ் எடுத்தாரா? அல்லது நான் எடுத்தனா ? யாருமே எடுக்கலையே.. பொதுக்குழு…. சர்வ வல்லமை படைத்த பொதுக்குழு… பொதுக்குழு தான் இறுதி அதிகாரம் படைத்தது. எனவே இறுதி அதிகாரம் படைத்த பொதுக்குழு ஒருமனதா ஓபிஎஸ் மற்றும் அவரை சார்ந்தவர்களை நீக்கி இருக்காங்க, அது கட்சி எடுத்த முடிவு என தெரிவித்தார்.