ஊரடங்கு அமலில் உள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் தான் உபயோகிக்கும் ஸ்மார்போனை வித்தியாசமான முறையில் நிறுத்தி வைத்து பாடம் எடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ஊரடங்கின் காரணமாக கல்வி நிலையங்கள்அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புனேவைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியர் மௌமிதா ஆன்லைன் வகுப்புகளைப் பதிவு செய்வதற்காக தனது ஸ்மார்ட்போனை நிறுத்தி வைப்பதற்காக தனது வீட்டில் இருந்த அத்தியவாசிய பொருட்களான நாற்காலி மற்றும் துணி துண்டுகளைப் பயன்படுத்தி ஒரு தற்காலிக ஸ்டாண்ட் செய்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவ்வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுக்கொடுத்த முறையினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, பலரும் நல்ல கருத்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.