தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் அனுதீப். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடிக்க, பிரேம்ஜி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். காமெடி ஜானரில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அனுதீப்க்கு ஒரு அரியவகை நோய் இருப்பதாக அவரே தற்போது கூறியுள்ளார்.
அதாவது அவருக்கு highly sensitive person என்று அரிய வகை நோய் இருக்கிறது. இந்த நோய் பாதித்தவர்கள் காபி கொடுத்தால் 2 நாட்களுக்கு தூங்க முடியாதாம். அதன் பிறகு ஆப்பிள் ஜூஸ் குடித்தால் சுத்தமாக மூளையே வேலை செய்யாதாம். அதன் பிறகு அதிக ஒளி மற்றும் அதிக நெடி போன்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நோய் பாதித்தவர்களால் சுவாசிக்க கூட முடியாது என்று கூறியுள்ளார். மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுக்கு விரைவில் குணமாகி விடும் என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.