Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… மைனா நந்தினியின் கணவருக்கு என்னாச்சு….? இவ்ளோ பெருசா கட்டு போட்டு இருக்காரே…. ரசிகர்கள் ஆறுதல்….!!!!!

சின்னத்திரையில் அறிமுகமான மைனா நந்தினி தற்போது திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் இருக்கிறார். மைனா நந்தினி நடிப்பது மட்டும் இன்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வீட்டுக்குள் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்.

 

இந்நிலையில் மைனா நந்தினியின் கணவர் கையில் கட்டோடு இருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு தன்னுடைய தோளில் ஏற்பட்ட  காயத்தின் காரணமாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாது என்றும் வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் மற்றும் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் யோகேஷுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Categories

Tech |