பப்லு தொழில் நிமித்தமாக மலேசியா சென்ற போது அங்கு அவருக்கு 23 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பப்லு அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. 57 வயதான பப்லு 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள பப்லு, தனக்கு ரகசிய திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இரண்டாவது திருமணம் குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை நடிகர் பப்லு. இந்நிலையில் பிரபல நடிகையான காஜல் பசுபதி, பப்லுவின் இரண்டாவது திருமணம் குறித்து கருத்து கூறியதாவது, “அதாவது பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்டுறான்… உங்களுக்கு என்னய்யா பிரச்சனை? பொறாமை பிடிச்ச உலகம் என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்”. மேலும் பப்லு ப்ரித்திவிராஜுடன் எடுத்த செல்பியையும் ஷேர் செய்துள்ள காஜல் நண்பன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.