Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடிய விமானிகள் …. நடுக்கடலில் நடந்த சம்பவம் …. வெளியான வீடியோ ….!!!

 நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமானிகளை மீட்புக்குழுவினர் பத்திரமாக  மீட்டனர்.

அமெரிக்க நாட்டில் Hawai  மாநிலத்தில் உள்ள Honolulu விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 என்ற சரக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை  உடனடியாக விமான நிலையத்திற்கு திரும்ப முயன்றுள்ளனர். ஆனால் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான நிலையம் வரை செல்ல முடியாததால் விமானத்தை நடு கடலிலேயே  தரை இறக்கினர் .

இதில் விமானம் நீரில் மூழ்கிய நிலையில் விமானத்தில் இருந்த விமானிகள்  நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர் . இதுகுறித்து தகவல் அறிந்த அமெரிக்க கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹெலிகாப்டரின் உதவியுடன்  நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமானிகளை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் கடலில் தத்தளித்து  கொண்டிருந்த பயணிகளை  மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் மீட்ட  வீடியோ காட்சிகளை அமெரிக்க கடற்படை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |