சீனாவில் இருந்து வாங்கிய வென்டிலேட்டர்களால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இருந்து வாங்கிய நூற்றுக்கணக்கான வெண்டிலேட்டர் களை பயன்படுத்தினால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து என்பது தெரியவந்துள்ளதையடுத்து பிரிட்டன் மருத்துவர்கள் அவற்றை ஒதுக்கி உள்ளனர்.
சீனாவின் அந்த வெண்டிலேட்டர்களில் ஆக்சிஜன் வழங்குவதில் பிரச்சினை இருப்பதாகவும், சரியாக சுத்தம் செய்ய இயலாமை மற்றும் வழக்கத்திற்கு மாறான டிசைனில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விவரிக்கும் கையேடுகளிலும் குழப்பம் இருப்பதாகவும், அவற்றை ஆம்புலன்சில் மட்டுமே பயன்படுத்தலாம், மருத்துவமனைகள் பயன்படுத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த மயக்க மருந்து நிபுணர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவரான ஒருவர், மருத்துவர்கள் சார்பில் NHS தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிரிட்டன் மருத்துவர்களுக்கு இந்த வகை வென்டிலேட்டர்களை பயன்படுத்துவதில் அனுபவம் இல்லாததன் காரணமாக அவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.