பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு 12 வயது முதல் 15 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறைத்துக்கொள்ள பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலகில் பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதனால் முழுவீச்சில் தடுப்பூசி தடுக்கும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில் பிரிட்டன் அரசு 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் ஆணையத்தின் தலைமை செயலாளர் அதிகாரி ஜூன் ரெய்ன் கூறியதாவது: ” நாங்கள் மருத்துவ பரிசோதனையில் மிகக் கூர்மையாக கவனித்தோம் 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசிகளை செலுத்துவதால் ஏதேனும் பக்க விளைவு ஏற்படுகிறதா? தடுப்பூசியை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா? என்று பல முடிவுகளின் அடிப்படையில் இதை இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.