இங்கிலாந்து அறிவியல் ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்..
சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து அரசும் ரூ 133 கோடி ஒதுக்கீடு செய்து கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்தை உருவாக்க தீவிர ஆய்வுகள் செய்து வருகின்றன.
இந்த சூழலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவியல் ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது. இந்த மருந்தை ஆராய்ச்சி நிறுவனத்தில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்து பார்த்ததில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அல்லது தன்னார்வளர்களுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். ஆகவே விரைவில் தீர்வு கிடைக்கும் என இங்கிலாந்து அரசு நம்பிக்கையுடன் கூறியுள்ளது. இந்த சோதனை மட்டும் வெற்றி பெற்றால் விரைவில் மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டு மருத்துவ வல்லுனர்கள் குழு தெரிவித்துள்ளது.