அமெரிக்காவில் கல்வியை தொடர்ந்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நாடு திரும்ப வேண்டும் என நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அமெரிக்கா பல்கலை.க்கழகங்களின் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே தனது படிப்பை முடித்ததும் 3 ஆண்டுகள் வரை அங்கு தங்கி பணிபுரிய அனுமதி அளிக்கப்படுவதால் வேலை செய்தும் வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் குடியரசு கட்சியினர் வெளிநாட்டு மாணவர்கள் தனது கல்வியை முடித்ததும் தங்கி வேலை செய்வதை தடை செய்ய வேண்டும் எனக் கூறி மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் எச்1பி விசா கிடைக்காத வெளிநாட்டு மாணவர்கள் பயிற்சி மாணவர்கள் என்ற பெயரில் வேலை செய்து வருவதால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பரிபோவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டால் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அங்கு வேலை செய்ய முடியாது. மேலும் தனது கல்வியை முடித்ததும் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதால் சீனர்கள் அடுத்தபடியாக இந்தியர்கள் தான் அமெரிக்காவில் அதிகம் படித்து வருவதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.