உக்ரைனில் இக்கட்டான சூழ்நிலையில் நாம் அந்நாட்டை தனித்து விடக் கூடாது என்று போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலால் அந்நாட்டு மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு அகதிகளாக பிற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் போலந்து பிரதமர் Mateusz Morawiecki அகதிகளாக வரும் உக்ரைன் மக்களுக்கு தற்காலிக தங்கும் இடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக உக்ரைன் ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். ரஷ்யா உடனான போரில் உக்ரைனின் பலவீனமானவர்களை ஆதரிப்பதன் மூலம் அந்நாட்டில் போராடும் வீரர்களின் குணத்தை நாம் ஆதரிக்க வேண்டும். மேலும் நான் இங்கு ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளை பார்க்கிறேன். ஏனென்றால், தங்களது தாய் நாடு மற்றும் நம்மை பாதுகாப்பதற்காகவும் உக்ரைனிய ஆண்கள் போராடி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.