உக்ரைன் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று தனது கணவரான ராணுவ வீரரிடம் தொலைபேசி வாயிலாக அனுமதியளித்த ரஷ்ய பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிறு குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் உட்பட நூற்றுக்கணக்கான வன்கொடுமைகளை அந்நாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையில் சமீபத்தில் ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி ஒருவர் தனது கணவரிடம் தொலைபேசியில் உக்ரைன் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்த ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை வைத்துப் பார்க்கும் போது ரஷ்யா வீரர்கள் மட்டுமின்றி அவரின் குடும்ப உறுப்பினர்களும் பண்பாடற்றவர்களகவே உள்ளனர். இது மட்டுமின்றி 80 சதவீதம் பேர் உக்ரைன் போரை ஆதரித்து வருவதாக உக்ரைன்அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஷ்ய வீரர் மற்றும் அவரது மனைவியை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் Roman Bykovsky மற்றும் அவரது மனைவி Olga Bykovskaya ஆகிய இருவரும் தான் தொலைபேசியில் அவ்வாறு பேசி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தம்பதிகளின் புகைப்படங்களையும் அவர்களை பற்றிய தகவல்களையும் கண்டறிந்துள்ளனர். அதாவது இவர்கள் இருவரும் தனது 4 வயது மகனுடன் 2018 ல் இருந்து Orel பகுதியில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரையும் பல முறை தொடர்பு கொண்ட போதும் பதில் அளிக்க மறுத்து உள்ளதாகவும், ஆடியோ பதில் தாங்கள் பேசவில்லை என்று மருது உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இவர்கள் இருவரும் தங்களது இணையதள பக்கங்களை முடக்கி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.