உக்ரைன் போர் குறித்த இன்று அவசரகால சிறப்பு அமர்வானது கூடுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா மூன்று வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நியூயார்க் நகரில் உக்ரைனில் நடக்கும் போர் குறித்து ஐ.நா அவையின் அவசரகால சிறப்பு அமர்வு கூறுகிறது.
இந்தக் கூட்டம் 193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 22 நாடுகளின் வேண்டுகோளையடுத்து கூடுகிறது. இதற்கிடையில் முன்னதாகவே கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை இந்த அமைப்பின் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் ரஷ்ய படைப்புக்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐநா பொது சபை தலைவரின் செய்தி தொடர்பாளர் பாலினா குபியாக் கிரேர் ஒரு வரைவு தீர்மானம் உக்ரைன் மற்றும் பிற உறுப்பு நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டு, அது சுழற்சிக்கு விடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்