ரஷ்யா தாக்குதலை மேலும் அதிகரிக்கவிருப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போர் குறித்து தெரிவித்திருப்பதாவது, ரஷ்ய படையினர் இந்த வாரத்தில் போரை அதிகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ரஷ்யா, தங்கள் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களை உக்ரைன் படையினர் தடுத்துவிட்டனர்.
எங்கள் நாட்டின் தெற்குப் பகுதியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எங்களுக்கான அனைத்து பகுதியையும் திரும்பப் பெற்று விடுவோம். கருங்கடல் எங்கள் நாட்டு மக்களுடையதாகவும், பாதுகாப்பானதாகவும் மாறிவிடும். ஐரோப்பிய யூனியனில் இணைய வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானத்திற்காக உக்ரைன் அரசு காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.