உக்ரைன் நாட்டில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மெய்நிகர் சொத்துகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்.
மெய்நிகர் சொத்துக்களில் பங்குச்சந்தையும், கிரிப்டோகரன்சி வணிகமும் அடங்குகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் இனிமேல் கிரிப்டோகரன்சியை பயன்படுத்த அரசு அதிகாரப்பூர்வ அனுமதியளிக்கவிருக்கிறது. மேலும், உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து தற்போதுவரை நன்கொடையாக அந்நாட்டிற்குள் ரூ.750 கோடி கிரிப்டோகரன்சிகள் வந்திருக்கிறது.
இந்நிலையில், நேற்று கிரிப்டோகரன்சி பயன்பாட்டிற்கான ஒப்பந்தத்தில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அனுமதி வழங்கினார். இதன் மூலம், இனிமேல் உக்ரைனில் கிரிப்டோகரன்சி வணிகத்தை மேற்கொள்வோருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.