Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை அதிர வைத்த உக்ரைன்… கருங்கடலில் நின்ற மாஸ்க்வா போர்க்கப்பல் மீது தாக்குதல்…!!!

ரஷ்ய நாட்டின் கடற்படைக்குரிய மாஸ்க்வா என்ற மிகவும் பயங்கர ஏவுகணை கப்பல் கருங்கடல் பகுதியில் நின்ற நிலையில் அதனை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்துள்ளது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா சுமார் ஒன்றரை மாதங்களாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய கருங்கடல் பகுதியில் மிகவும் பயங்கர போர்க்கப்பலான மாஸ்க்வாவை உக்ரைன் நாட்டின் தடுப்பு காவல் படையினர் தாக்கி அழித்திருக்கிறார்கள்.

இதனை உக்ரைன் நாட்டின் ஒடெசா பிராந்திய நிர்வாகியான மாக்சிம் மார்ச்சென்கோ உறுதிப்படுத்தியிருந்தார். எனினும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மாஸ்க்வாவில் இருந்த வெடிமருந்து வெடித்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டு கப்பல் பலமாக சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறது.

Categories

Tech |