உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா என்னும் உலையில் மீண்டும் மின் கட்டமைப்பை சேர்த்து இயங்க தொடங்கிய நிலையில் தனியாக செயல்பட்ட ஒரு உலை அடைக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா என்ற உலையில் கடந்த வாரத்தில் நடந்த போர் தாக்குதல் காரணமாக மின் இணைப்புகள் மொத்தமாக துண்டிக்கப்பட்டன. ஆறு உலைகள் இருக்கும் அதன் இயக்கம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. எனவே அந்த நகரத்தின் மற்ற இடங்களுக்கு மின் விநியோகம் செய்வதில் இடையூறு உண்டானது.
இதன் காரணமாக, மீதமிருந்த ஒரு அணு உலை உதவியால் தான் மின் உற்பத்தி இத்தனை நாட்களாக நடந்தது. இந்நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த உலையை மீண்டும் இன்று இணைத்தார்கள். எனவே ஐரோப்பா நாட்டின் மிகப்பெரும் அணு உலை அடைக்கப்பட்டிருக்கிறது.