உக்ரைன் அரசு ரஷ்ய படைகளின் ஏவுகணைகளையும், ராணுவ வாகனங்களையும் அழித்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 4 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைன் படைகளும் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
மேலும், அந்நாட்டிற்கு ஆயுத உதவியும் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை, ரஷ்யப் படைகளின் 6 ஏவுகணை ராக்கெட் அமைப்புகளோடு சேர்ந்த ராணுவ வாகனங்களையும், மற்ற உபகரணங்களையும் டான்பாஸ் நகரில் அழித்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது.