Categories
உலக செய்திகள்

துறைமுகத்தை கைப்பற்றிய உக்ரைன்படை… உலக நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி….!!!

உக்ரைன் நாட்டின் துறைமுகங்களுக்கு உணவு தானியங்களின் ஏற்றுமதிக்காக முதல் தடவையாக வெளிநாடுகளிலிருந்து 8 கப்பல்கள் வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதால் உலக நாடுகளில் உணவு தானியங்களுக்கான பற்றாக்குறை அதிகரித்தது. எனவே, உணவுப் பொருட்களுக்கான விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டது. ஏனெனில், ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் துறைமுகங்களில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்து வந்தார்கள்.

இதனால் உலக நாடுகள் ரஷ்யா மீது குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் உக்ரைனில் இருக்கும் பாம்பு தீவில் இருந்த ரஷ்ய படையினரை உக்ரைன் படையினர் விரட்டி அடித்து விட்டு தங்கள் கைவசம் கொண்டு வந்தனர். எனவே தற்போது உக்கரைன் நாட்டின் விவசாய பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வெளிநாடுகளிலிருந்து எட்டு கப்பல்கள் வந்தடைந்திருக்கிறது.

Categories

Tech |