Categories
உலக செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள்… உக்ரைன் படையினர் அதிரடி…!!!

ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ட்ரோன்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது சுமார் 8 மாதங்களாக ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் ஈரான் தயாரித்த நூற்றுக்கும் அதிகமான ஷாஹெட்-136 காமிகேஸ் என்ற ட்ரோன்கள்  வீழ்த்தப்பட்டதாக கூறியிருக்கிறார். இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரஷ்யா மேற்கொள்ளும் போரில் தற்போது வரை 300க்கும் அதிகமான ஈரானால் தயார் செய்யப்பட்ட ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப்படைகளுக்கு அவை பெரிதும் உதவியாக இருந்தன. உக்ரைன் நாட்டின் முக்கியமான கட்டமைப்புகளை அழிக்க இந்த ட்ரோன்கள் உதவியது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ரஷ்ய நாட்டிற்கு தாங்கள் ஆளில்லா விமானங்களை ஏற்றுமதி செய்வதாக வெளியான குற்றச்சாட்டை ஈரான் மறுத்திருக்கிறது.

Categories

Tech |