Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கடத்தப்பட்ட மேயர்கள் கொலை…. அதிபர் ஜெலென்ஸ்கி கடும் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யப்படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேயர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர்தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் கீவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர், ரஷ்ய படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேரியர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், ரஷ்யப்படைகள் கடத்திய மேயர்களில் சிலர் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை, என்றும் சிலர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், இதற்கு முன்பு அவர், உக்ரைன் அமைதியை விரும்புகிறது என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது. மேலும் ரஷ்யாவின் முக்கியமான கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது பேச்சுவார்த்தை மூலமாக விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |