சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அகதிகளாக சென்ற உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்து அரசு, 40 ஆயிரம் உக்ரேன் அகதிகளுக்கு தங்க இடம் வழங்கியது. ஆனால், உக்ரைன் நாட்டிலிருந்து வந்த மக்களில் சிலர் தங்கள் நாட்டின் டான்பாஸ் பகுதியை மட்டும் ரஷ்ய படையினர் குறி வைத்திருப்பதால், அந்நாட்டின் சில பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகிறார்கள்.
எனவே, தங்கள் நாட்டிற்கே உக்ரைன் மக்கள் திரும்புவதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன்-போலந்து எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், கடந்த வாரத்தில் உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனவும் உக்ரைன் நாட்டிற்கு திரும்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். உலக நாடுகளிலிருந்து தற்போது வரை 6 லட்சம் உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பியிருப்பதாக ஐ.நா அமைப்பின் அகதிகளுக்கான உயர் ஆணையம் கூறியிருக்கிறது.