உக்ரைன் நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி, குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்று கடுமையாக சாடியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் அதிபரான ஸெலென்ஸ்கி டெலகிராம் பக்கத்தில், தங்கள் நாட்டில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அழிக்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமின்றி நாட்டில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கு இறுதியான ஆதாரம் குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப்படையினர் 40 ஆயிரம் மக்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.