உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யப் படைகள் தங்கள் நாட்டின் தெற்கு பகுதிகளை சூறையாடியிருப்பதாக கூறியதோடு மக்களை கடத்தி கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கிறார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முகநூல் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தங்கள் நாட்டின் தெற்குப் பகுதிகளை ரஷ்ய படைகள் நிலைகுலையச் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அங்கு அதிபர் விளாடிமிர் புடின் சித்திரவதை முகாம்களை உருவாக்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தங்கள் நாட்டின் அரசாங்க பிரதிநிதிகளை ரஷ்யப்படைகள் கடத்துவதாகவும் கூறியிருக்கிறார். உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் மனிதநேய உதவிகளையும் ரஷ்யப் படைகள் திருடி பஞ்சத்தை ஏற்படுத்துவதாக கூறியிருக்கிறார். உக்ரைன் ஐரோப்பாவின் உணவுக்கூடை என்று அழைக்கப்பட்டது.
ஆனால் இன்று மக்கள் சாப்பாட்டிற்காக நாய்களை கொன்று உண்ணும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியான ஸ்டாலினை போன்று உக்ரைன் நாட்டு மக்களை பசியால் வாடச் செய்து கொலை செய்ய புடின் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று வரலாற்றாளர்கள் கூறியிருக்கிறார்கள்.