ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் குறித்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்தாவது, உக்ரைன் நாடு ரத்தக்களறியாக இருக்கிறது. அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் குறித்த பேச்சுவார்த்தையில் தற்போது தடை ஏற்பட்டிருக்கிறது. எனினும் பேச்சுவார்த்தை மூலமாக போரை நிறுத்த முடியும். இந்தப் போரில் உக்ரைன் வெற்றியடைந்தாலும் பேச்சுவார்த்தைக்கு பின்பு தான் போர் முடிவடையும் என்று கூறியிருக்கிறார்.