உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்ய நாட்டின் 236 கல்லூரிகள், பல்கலைகழகங்கள், 261 கல்லூரி தலைவர்கள் மீது தடை விதிக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது 107 வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர். மேலும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய நாட்டின் 236 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடை அறிவிக்கப்படுவதாக கூறியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் ரஷ்யாவைச் சேர்ந்த 236 கல்வி மையங்களுடன் இருக்கும் கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள், அறிவியல் ஒத்துழைப்பு போன்ற செயல்பாடுகளுக்கும் தடை அறிவித்துள்ளார்.