உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை 3 முறை கொலை செய்ய முயற்சித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழில் உக்ரைனின் அதிபரை கொலை செய்வதற்கு சில குழுக்கள் மூன்று முறை முயற்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்காக இரு வெவ்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பில், ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பானது, உக்ரைன் அரசுக்கு ரகசிய தகவல் கொடுத்திருக்கிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட உக்ரைன் அதிகாரிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் செயலாளரான, ஒலக்சி டனிலோவ் தெரிவித்ததாவது, ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு, முன்னதாகவே எங்களுக்கு கொலை முயற்சி பற்றி எச்சரித்தது. எனவே, உக்ரைன் அதிபரை கொல்வதற்கு திட்டமிட்டிருந்த படையினரை, தலைநகர் கீவ் அருகில் இருக்கும் புறநகர் பகுதியில் கொன்றுவிட்டதாக கூறியிருக்கிறார்.