Categories
உலக செய்திகள்

ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற ஜெலன்ஸ்கி…. ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க நடவடிக்கை..!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் இணைந்த  ஜி-7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் இன்று பங்கேற்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 120 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருப்பதால், ரஷ்ய நாட்டின் மீது தங்கம் இறக்குமதிக்கான தடை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

அப்போது உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி பேசியதாவது, ஜி-7 மாநாட்டில் ரஷ்ய நாட்டின் மீது அதிக பொருளாதார தடைகளை அறிவிக்க வேண்டும். தங்கள் நாட்டிற்கு ஆயுத உதவிகள் அதிக அளவில் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் ரஷ்ய நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா மற்றும் பிற ஜி-7 நாடுகள் தடை அறிவிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |