உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கடுமையாக போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் நான் சொல்வதை தற்போது அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
குறிப்பாக ரஷ்ய அதிபர் நான் கூறுவதைக் கேட்க வேண்டும். இது சந்திப்பு மேற்கொள்வதற்கான சமயம். பேச்சுவார்த்தைக்கான நேரம். அமைதி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும். எங்களுடைய அர்த்தமான, நியாயமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தாமதிக்காமல் ரஷ்யா தங்களின் தவறுகளிலிருந்து சேதத்தை குறைப்பதற்கு வாய்ப்பாக பேச்சுவார்த்தை தான் இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.