ரஷ்ய போர் குறித்து நூதன முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி உலகநாடுகளின் ஆதரவை பெறுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தன் ட்விட்டர் பக்கத்தில் உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களது நாடுகளின் அரசிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் உக்ரைன் நாட்டிற்கு கனரக ஆயுதங்களை அனுப்புமாறு கேளுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அவரின் இந்த கோரிக்கை வைரலாக பரவியது. பல மக்கள் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக காணொளிகளை பதிவிட்டிருக்கிறார்கள். டான்பாஸ் நகரில் ரஷ்யப்படைகள், தீவிரமான தாக்குதலை மேற்கொண்டிருக்கும் நிலையில் அதிபர் ஜெலென்ஸ்கி, கனரக ஆயுதங்கள் அனுப்புமாறு உலக நாடுகளை கோரியுள்ளார்.