உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மேலும் 6 ஆயிரம் கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை அனுப்புவதாக கூறிய நிலையில் உலகநாடுகள் கனரக ஆயுதங்களை தங்களுக்கு தருமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் தொடர்ந்து வருகிறது. எனவே, அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகள் அளித்து வருகிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, மரியுபோல் நகரத்தின் ஒரு பகுதியில் தற்போதும் தங்களின் படைகள் இருக்கிறது.
அப்பகுதியில் நிலை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்கள், மக்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் ரஷ்யப் படையினர் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உக்ரைன் நாட்டிற்கு மேலும் 6,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஆயுதங்களை அளிப்பதாக கூறியிருக்கிறார். எனினும், ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டிற்கு கனரக ஆயுதங்களை அனுப்புமாறு உலக நாடுகளை கேட்டிருக்கிறார்.