Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தீவிரவாதத்தின் அனுசரணையாளராக அங்கீகரிக்க வேண்டும்…. உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய நாட்டை தீவிரவாதத்தின் அனுசரணையாளராக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டிடம் கோரியிருக்கிறார்.

உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் சிறைச்சாலையில் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். சிறைச்சாலையை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் உக்ரைன் கைதிகள் 50 பேர் உயிரிழந்ததாக கூறிய அவர், வேண்டுமென்றே ரஷ்யா இந்த போர் குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் நேற்று வீடியோ ஒன்றையும் ஜெலன்ஸ்கி வெளியிட்டிருந்தார். அதில், அமெரிக்க நாட்டிடம் நான் முறையிடுகிறேன். இதற்கு ஒரு முடிவு இப்போதே தேவை என்று கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்க நாட்டிடம் ரஷ்யாவை தீவிரவாதத்தின் அனுசரணையாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

Categories

Tech |