உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது மேற்கொண்டு வரும் போரால் தன் 9 வயது மகன் ராணுவ வீரராக விரும்புகிறார் என்று கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் ஐந்து மாதங்களாக நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். அதன் பிறகு, அவர் சிறப்பு நேர்காணலில் தெரிவித்ததாவது, ஒன்பது வயதுடைய எனது மகன் பியானோ வாசிப்பது, நாட்டுப்புற கலை குழுவிற்கு செல்வது, ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று கலைகளில் ஆர்வமாக இருந்தான்.
ஆனால், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது மேற்கொள்ளும் போருக்கு பின் அவன் ராணுவ வீரராக விரும்புவதாக கூறுகிறான். அவனை மீண்டும் என்னால் மனிதநேயம் மற்றும் கலையில் கொண்டு சேர்க்க முடியாது. அவனது குழந்தை பருவம் மீண்டும் அவனுக்கு கிடைக்க வேண்டும். அவன் தன் வாழ்நாளை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியிருக்கிறார்.