Categories
உலக செய்திகள்

விட்டுக்கொடுப்பது பற்றி துளியும் சிந்திக்கவில்லை…. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக நேற்று உரையாற்றியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்று 21-வது நாளாக போர் தொடுத்திருக்கும் நிலையில்,  அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலிக் காட்சி வாயிலாக  நேற்று உரையாற்றியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் 9/11  தாக்குதலுக்கு பின், மிகவும் மோசமான போரை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 8 வருடங்களாக ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது வரை விட்டுக்கொடுப்பது தொடர்பில் சிறிதும் சிந்திக்கவில்லை. ரஷ்ய நாட்டின் சந்தையிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் முழுவதுமாக வெளியேறிவிட வேண்டும். ஏனென்றால் அதில் எங்கள் ரத்தக்கரை இருக்கிறது.

அதே சமயத்தில், இந்த போரில் எங்களுக்கு உறுதுணையாக நின்றதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

Categories

Tech |