Categories
உலக செய்திகள்

ஒரு உக்ரைனியர் கொல்லப்பட்டாலும்…. இது நடக்காது… உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மரியுபோல் நகரத்தில் இரும்பு ஆலையில் உள்ள உக்ரைன்  மக்களில் ஒருவர் உயிரிழந்தாலும் ரஷ்ய நாட்டின் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காது என்று கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளரான லாயிட் ஆஸ்டின் போன்றோர் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவிற்கு இன்று சுற்றுப்பயணம் செல்விருக்கிறார்கள்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பதாவது, மரியுபோல் நகரத்தின் இரும்பு ஆலையில் உள்ள உக்ரைன் மக்களில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டாலும் ரஷ்யாவின் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காது என்று எச்சரித்திருக்கிறார்.

இது மட்டுமல்லாமல், ரஷ்ய படையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கெர்சன் நகரத்தில் ஏதாவது சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் உடன்படாது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |