Categories
உலக செய்திகள்

உயிருடன் இருக்க விரும்பினால்…. உடனே ஓடிவிடுங்கள்…. எச்சரிக்கும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, உயிரோடு இருக்க நினைத்தால் உடனே நாட்டிலிருந்து  வெளியேறி விடுங்கள் என்று ரஷ்யப்படைகளுக்கு எச்சரித்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரில் போர் தீவிரமாகி கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, தற்போது கெர்சன் நகரத்தில் இருக்கும் ரஷ்ய வீரர்களின் முதல் கட்ட பாதுகாப்பு உக்ரைன் படையினரால் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அதிகாரிகள் கூறியுள்ளதாவது, நாங்கள் சில பகுதிகளில் தாக்குதலை ஆரம்பித்தோம். இந்த நடவடிக்கை தொடர்பில் அதிகமான தகவல்களை எங்களால் தர இயலாது. ஆனால் தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்யப்படைகள் வெளியேறிவிட வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும் தங்கள் மக்களிடம் அவர் வீடியோவில் பேசியதாவது, ரஷ்யப் படையினர் உயிருடன் இருக்க விரும்பினால் உடனே நாட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும். ஏனெனில் தற்போது நடக்கும் தாக்குதலில் நாங்கள் உறுதியாக வெற்றி அடைவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |