Categories
உலக செய்திகள்

விமானிகள் பறக்க தடை விதிக்குமாறு உக்ரைன் கோரிக்கை… நேட்டோ நிராகரிப்பு…!!!

உக்ரைன், தங்கள் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை, நேட்டோவால் நிராகரிக்கப்பட்டிருக்கிற  து.

உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10-வது நாளாக ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இரண்டு தரப்பிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தரைவழி, வான்வழி, கடல் வழி என்று அனைத்து வழிகளிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது.

எனவே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தங்கள் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட வேண்டும் என்று நேற்று நேட்டோ அமைப்பிடம் கோரிக்கை வைத்தார். அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் பயணிகள் விமானம், போர் விமானம் மற்றும் சரக்கு விமானம் போன்ற விமானங்கள் உக்ரைன் வான் பரப்பில் பறக்க முடியாது.

இதனால், ரஷ்யாவின் போர் விமானங்கள், உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வது தடுக்கப்படும். ஆனால் உக்ரைன் அதிபர் விடுத்த இந்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்திருக்கிறது. இதுபற்றி நேட்டோ அமைப்பின் தலைவரான ஸ்டோலன்பெர்க் தெரிவித்திருப்பதாவது, வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடை அறிவிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

நேட்டோ படையின், போர் விமானங்களை உக்ரைன் வான் எல்லை பகுதிக்கு அனுப்பி ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டு விமானங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்க வேண்டும். நாம் அவ்வாறு செய்தால், பல நாடுகளை உள்ளடக்கி அதிகளவில் உயிர் பலிகளை ஏற்படுத்தி, ஐரோப்பாவை முழு போருக்கு அழைத்துச் செல்லும் என்று கூறி அந்த  கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

Categories

Tech |