உக்ரைன் அரசு அதிக தொலைவிற்கு பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகளை அமெரிக்காவிடம் கோரியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய படையினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிக தொலைவிற்கு சென்று துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகளை தங்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று அமெரிக்காவிடம் உக்ரைன் தூதரான ஒக்ஸானா மார்க்கரோவா கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, எங்கள் நாட்டை காப்பதற்கு இது போன்ற ஆயுதங்கள் தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் எப்போதும் ரஷ்ய நாட்டை தாக்கியது இல்லை. ரஷ்ய வீரர்கள் மேற்கொள்ளும் குற்றங்கள் எந்த அளவிற்கு கேவலமாக இருந்தாலும் பரவாயில்லை.
நாங்கள் எப்போதும் ரஷ்ய நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம். தங்களை நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க நினைக்கிறோம். மேலும், உக்ரைன் வீரர்களை ரஷ்ய ஆயுதப்படைகளிலிருந்து விலக்கி வைக்க நினைக்கிறோம்.
எங்கள் வீரர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக அதிக தொலைவிற்கு செல்லும் ஏவுகணைகளை அமெரிக்கா அளிக்க வேண்டும். அதற்காக அந்நாட்டிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.