உக்ரைன் நாட்டில் உள்ள மரியபோல் என்னும் நகரத்தில் போர் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. தலைநகர் கீவ்வில் ரஷ்ய படையினர் புகுந்து அரசாங்க கட்டிடங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டனர். அதன் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் பயங்கரமான குண்டுகளை வீசியது.
இந்நிலையில், அந்நாட்டின் மரியபோல் நகரத்தில் போர் தீவிரமாக நடந்து வருவதால் அந்நகர் முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தீவிரமாகப் போர் ஒருபுறம் நடக்கும் நிலையில், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.