Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மீதான போரை நிறுத்துங்கள்!”… வெள்ளை மாளிகைக்கு வெளியில் போராட்டம்…!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, போராட்டம் நடைபெற்று வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பிற நாடுகள் இதில் தலையிட்டால் வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் போரை தொடங்கியுள்ளன.

இதில், டினிப்ரோ, கார்கிவ், கீவ் ஆகிய நகரங்களில் இருக்கும் விமான தளங்கள், ராணுவ கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியது. பல்வேறு நகர்களில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து, இரண்டாவது நாளாக போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

Categories

Tech |