உக்ரேன் நாட்டில் இருக்கும் உணவு விவசாய இலக்குகளை ரஷ்யா அழித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு மற்றும் விவசாய இலக்குகளை ரஷ்யா அழித்துக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் நெறிப்படி மீண்டும் கருங்கடலை திறக்கக்கூடிய ஒப்பந்தங்களை செய்ய இவ்வாறு செய்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகள், தங்கள் நாட்டின் விவசாய பொருட்களுக்கான முனையங்கள் ரஷ்யப் படைகள் தாக்கி அழித்ததாக கூறியிருக்கிறார்கள்.
உலக அளவில் உணவு தட்டுப்பாட்டை அதிகமான பேரழிவாக காண்பிக்க ரஷ்யா விரும்புகிறது என்றும் கூறியிருக்கிறார்கள். உலகளாவிய நெருக்கடி பதில் குழுவானது, ரஷ்ய போரால் எரிசக்தி ஆற்றல், உணவு, பாதுகாப்பு, நிதி போன்றவற்றில் உண்டான விளைவுகள் தொடர்பில் கடந்த புதன்கிழமை அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதில் உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக 94 நாடுகளில் குறைந்தபட்சம் 1.6 பில்லியன் மக்கள் உணவு, நிதி, எரிசக்தி போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.