ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் இருக்கும் உருக்கு ஆலையில் பாதுகாப்பில் இருந்த உக்ரைன் தளபதிகள் இருவர் ரஷ்ய படையினரிடம் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ரஷ்ய நாட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.
மரியுபோல் நகரத்தில் இருக்கும் ஊருக்காலையில் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டு வந்த அசோவ் படைப்பிரிவின் ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் வீரர்கள், ரஷ்ய படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். விசாரணை மேற்கொள்வதற்காக அவர்களையும் ரஷ்ய நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதால் உக்ரைன் அரசு அச்சம் தெரிவித்திருக்கிறது.