உக்ரைன் ராணுவம் செவெரோடொனட்ஸ்க் எனும் பகுதியில் மீதமிருக்கும் தங்கள் வீரர்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 122-ஆம் நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. செவெரோடொனட்ஸ்க் என்னும் நகரத்தில் தீவிரமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக ரஷ்ய படையினர் அந்நகரத்தையும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் ஆக்கிரமித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நகரங்களில் இருக்கும் உக்ரைன் வீரர்களை முற்றுகையிட அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, அந்நகரில் மீதமிருக்கும் உக்ரைன் வீரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட உத்தரவிடப்பட்டிருக்கிறது.
உயிரிழப்புகளை தவிர்க்க, அங்கிருந்து வெளியேறுவது தான் சரியானது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பு இருக்கக்கூடிய ராணுவ நிலைகளுக்கு சென்று, அங்கிருந்து ரஷ்ய தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்று உக்ரைன் வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.