உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரால் ஏற்பட்ட சேதத்திற்கும் உயிர்பலிகளுக்கும் ரஷ்யா தான் முழுப் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால், வேறு வழியின்றி உக்ரைன் அரசு, தங்கள் மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, அந்த நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள்.
ரஷ்யா, பல பகுதிகளிலிருந்தும் உக்ரைன் நாட்டை நோக்கி குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகராக இருக்கும் கார்கிவ்வை ஆக்கிரமிக்க ரஷ்ய படைகள் முயன்று வருகிறது. மேலும், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், உக்ரைன் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் உடனே, இந்த போரை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதில், போரால் ஏற்பட்ட சேதம், உயர்பலிகளுக்கு ரஷ்யா தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். உக்ரைன் நாட்டில் இனப்படுகொலை நடப்பதாக கூறி போர் உண்டாகும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பில் அடுத்த வாரம் விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.