Categories
உலக செய்திகள்

இன்று நடக்கிறது…. ஐ.நா அவையின் அவசரகால சிறப்பு அமர்வு… உக்ரைன் போர் குறித்து ஆலோசனை…!!!

உக்ரைன் போர் குறித்த ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வானது, இன்று நடக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் 3 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள், உக்ரைன் நாடு முழுக்க கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. இரு தரப்பிலும் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. போரை நிறுத்த, உலக நாடுகள்  வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் நடக்கும் போர் குறித்த ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வுக் கூட்டமானது, இன்று நடக்கிறது. பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட 22 உறுப்பு நாடுகளானது, ஐ.நாவின் தலைவரான அப்துல்லா ஷாஹிதிற்கு கடிதம் அனுப்பியிருக்கின்ற்ன. எனவே, இந்த சிறப்பு அமர்வுக் கூட்டம் நடக்கிறது.

Categories

Tech |