ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் உக்ரைன் நாட்டின் வின்னிட்சியா விமான நிலையம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பயங்கரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்யப்படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் இருக்கும் வின்னிட்சியா நகரத்தில் ரஷ்ய படைகள் சுமார் 8 தடவை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் அந்த நகரில் உள்ள வின்னிட்சியா விமான நிலையம் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, விமான நிலையத்தை முழுமையாக அழித்துவிட்டனர். பெற்றோர், தாத்தா பாட்டி என்று எங்களின் பல தலைமுறைகளை அவர்கள் மொத்தமாக தகர்த்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.